Monday, 26 October 2015

எரிச்சலோ எரிச்சல்! மொதல்ல நீங்க திருத்துங்க சாமிகளா....பொண்ணுங்கள பாதுகாக்கிறதப் பத்தி அப்புறம் கவலைப்படலாம்.

மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்யக்கூட பெண்கள் எல்லாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதிருக்கிறது. இது குறை அது குறை என்று ஆரம்பித்து எதையும் செய்யவிடாமல் தடுத்து பெண்களை முடக்கி வைக்கவே இந்த சமுதாயம் விரும்புகிறது. :((((


மொதல்ல நீங்க திருத்துங்க சாமிகளா....பொண்ணுங்கள பாதுகாக்கிறதப்பத்தி அப்புறம் கவலைப்படலாம்-எரிச்சலோ எரிச்சல்!

சென்னைக்கு வந்ததிலிருந்து வாடகை வீடுதான். சொந்த வீடு ஆசையெல்லாம் தப்பித்தவறி கனவுல கூட வந்ததில்லை. அவரை மட்டுமே கஷ்டப்படுத்தி வீடு வாங்கிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. நானும் அவருடன் உழைத்து வாங்கிக்கொள்ளும் நிலைமை வந்தால் ரொம்பவே சந்தோஷமா இருக்கும்.

சொந்த வீடெல்லாம் வேணாம் வாடகை வீட்லயே நாலு செடி, கொடிகளை நட்டுவைக்க இடமிருக்குமான்னு தேடுவேன்.‍ இதுவரைக்கும் அப்படி அமைஞ்சதே இல்ல...மொட்டை மாடிகூட அப்படி அமைஞ்சதில்ல. :((

மனசுக்கு இதமா சில பூக்கள் பூக்குறதப்பாக்கணும்...நாலு மூலிகை செடியோட வாசம் வீட்டு வாசல்ல அப்படியே பரவி மணந்து கெடக்கணும். தண்ணி ஊத்தும்போது இலைகள் மலர மலர சிரிச்சு காத்துல அசையுறதப் பாக்கணும்...கூடவே வரும் கொஞ்சூண்டு மண்வாசனையும் கெறங்கடிக்கணும். அப்படியே அக்கடான்னு இந்த வெயிலுக்கு, இதமான சூழலில் ஒரு சேரைப்போட்டு ரொம்ப நேரம் உக்காந்திருக்கணும். பூச்செடிகளுக்கு நடுவுல என்கூடவே வாயாட்ற ஒரு கிளியும், கீச்கீச்சுன்னு கத்திகிட்டே இருக்கிற லவ்பேர்ட்ஸூம், புல் தரைக்கு நடுவுல ஒரு சின்ன குளம் மாதிரி செஞ்சு 2, 3 வாத்து மிதக்க விடணும். இப்படியெல்லாம் ரொம்ப நாளா ஆசை இருக்கு.

இப்படியெல்லாம் சொல்லும்போதே "இதெல்லாம் சென்னைல நடக்கணும் உனக்கு?...அதான் கற்பனையிலேயே எல்லாம் பாத்துட்டியே..அப்படியே பாத்துக்கோ"ன்னு சொல்லிடுவாரு. அவர் கஷ்டம் அவருக்கு.

ஆனாலும் தோட்டவேலை பாக்கணும்ன்னு ரொம்ப ஆசையா இருக்கு. கொளுத்துற வெயில், பவர்கட் எல்லாம் நினைச்சுப்பாத்தா இந்த மாதிரி சூழலே எங்காச்சும் கிடைச்சுராதான்னு இருக்கு. இந்த வெயில்ல சுடசுட சாப்பாடு எங்க இறங்குது? அஞ்சு ரூபா, பத்து ரூபாய்க்கு கூட ஒரு சொம்பு நிறைய கூழ் தர்றாங்க. அத வாங்கிக்குடிச்சிட்டு அக்கடான்னு தோட்டத்துல ஒரு கட்டிலப்போட்டு உக்காந்து போங்கடா நீங்களும், உங்க பவர்கட்டும்ன்னு சொல்லிட்டு இயற்கைய அனுபவிச்சோம்ன்னா அடா! அடா! அதுதான் சுகம் சுகம். :))
பேப்பரில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்களைப்பற்றிய செய்திகள் வந்தவுடன் எது நடக்குதோ இல்லையோ...

பெண்கள் வீட்டிலிருந்து வெளியே கிளம்புறதுக்குள்ள‌ ஏகப்பட்ட அறிவுரைகள், மிச்சசொச்ச தைரியத்தையும் பொசுக்கித்தள்ளும் எச்சரிக்கைகள், அக்கறை என்ற பெயரில் கட்டுப்பாடுகள், காலம் கெட்டுக்கெடக்கு போன்ற பழைய பஞ்சாங்கங்கள் எல்லாத்தையும் பெத்தவங்க, வந்தவங்க, வாச்சவங்க எல்லாரும் அள்ளித்தெளிச்சிட்டே இருக்காங்கப்பா...முடியல‌

இந்த மாதிரி நியூஸ் வந்தா மொதல்ல உங்க வீட்டு ஆம்பிளைகள உக்காரவச்சு பொண்ணுங்கள எவ்ளோ மதிக்கணும், எப்படி நடந்துக்கணும், வெளியே போகும்போதும் வரும்போதும் பொண்ணுங்கக்கிட்ட வாலாட்டாம எப்படி ஒழுங்கா வீடு வந்து சேரணும்ன்னு ஏன் உங்களுக்கெல்லாம் சொல்லவோ, எச்சரித்து அனுப்பவோ இல்ல பொண்ணுங்களுக்கு ஓதுற மாதிரி எப்பவும் ஓதிக்கிட்டே இருக்கவோ தோண மாட்டேங்குது? 

மொதல்ல நீங்க திருத்துங்க சாமிகளா....பொண்ணுங்கள பாதுகாக்கிறதப் பத்தி அப்புறம் கவலைப்படலாம்.

எரிச்சலோ எரிச்சல்