Monday 26 October 2015

உங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்க வேண்டுமா? இரட்டை குழந்தை பெற்ற அதிர்ஷ்டசாலிகள்!

 உங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…
ஆய்வுகளில், பால் பொருட்களை உட்கொள்ளாத பெண்களை விட பால் பொருட்களை அதிகமாக உட்கொண்டு வந்தால், 5 மடங்கு அதிகமாக இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் 4 மடங்கு அதிகமாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், ஓவுலேசன் காலத்தில் இரண்டு முட்டைகளை வெளியிடச் செய்து இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க உதவும் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. ஆய்வுகளில் எடை அதிகமாக இருக்கும் பெண்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பெறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அதேப்போன்று பெண்கள் உயரமாக இருந்தாலும், இரட்டையர்களை பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். பரம்பரையில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், இரட்டைக் குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாம்.பெண்கள் தாங்கள் உண்ணும் உணவுகளில் ஒருசில மாற்றத்தைக் கொண்டு வந்தால், இரட்டைக் கருவை சுமக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

இரட்டை குழந்தைகள் பிறக்க, உண்ண வேண்டிய‌ உணவுகள்
 ஃபோலிக் ஆசிட் பீன்ஸ், பசலைக்கீரை மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் அதிகம் உள்ளது. எனவே இவற்றை பெண்கள் உட்கொண்டு வந்தால், 40% இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாக ஆஸ்திரேலிய குழு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளான முழு தானியங்கள், பீன்ஸ் மற்றம் காய்கறிகளை உட்கொண்டு வந்தால், ஓவுலேசன் காலத்தில் இரட்டை முட்டை வெளிவர உதவும்


இரட்டை குழந்தைகள் பெற்றெடுத்த பிரபலங்கள்!!!

குழந்தைகள் என்றாலே சந்தோஷம் தான். அதிலும் இரட்டை குழந்தைகள் என்றால் "டபிள் டமாக்கா" சந்தோஷம். நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்கவே வரம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவர். அந்த வகையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்க உண்மையிலேயே வரம் பெற்றிருக்க வேண்டும். பிரபலங்களுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள் பற்றி தான் நாம் காணவிருக்கிறோம்....

இரட்டை குழந்தைகள் பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்!!! இரட்டை குழந்தைகள் பெற்றுள்ள பிரபலங்கள்!!!

ரோஜர் பெடரர் டென்னிஸ் உலகின் முடிசூட மன்னனாக திகழ்பவர் ரோஜர். தொடர்ந்து பல நூறு வாரங்கள் முதல் இடத்தில் இருந்து சாதனை புரிந்தவர், கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள் இவருக்கு லியோ மற்றும் லென்னி எனும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

ரோஜர் பெடரர் இந்த ஆண் இரட்டையர்கள் இரண்டாவது இரட்டையர்கள் ஆவர்கள். இதற்கு முன்பு கடந்த 2009ஆம் ஆண்டு மைலா (Myla) மற்றும் சார்லேனே (Charlene) எனும் பெண் இரட்டை குழந்தைகள் ரோஜருக்கு பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 சஞ்சய் தத் பாலிவுட்டின் மிகவும் விரும்பத்தக்க நடிகர்களுள் சஞ்சயும் ஒருவராவார். இவருக்கு ஷாறான் மற்றும் இக்ரா எனும் ஆண் பெண் இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள்.

 ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் உலகில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் நட்சத்திர தம்பதியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் நாக்ஸ் லியோன் மற்றும் விவியன்னே எனும் ஆண் பெண் இரட்டை குழந்தைகள் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் நாள் பிறந்தனர்.

 செலினா ஜெட்லி செலினா ஜெட்லி

 ஜென்னிஃபர் லோபஸ் ஜென்னிஃபர் லோபஸ் இவரது கணவர் மார்க் அந்தோனிக்கு கடந்த 2008ஆம் ஆண்டு மிகவும் அழகான மேக்ஸ் மற்றும் எம்மி எனும் ஆண் பெண் இரட்டை குழந்தைகள் இருக்கிறார்கள்.

 ஜூலியா ராபர்ட்ஸ் ஹாலிவுட்டின் பிரபல நாயகி ஜூலியா ராபர்ட்ஸ் மற்றும் இவரது கணவர் டேனிக்கு கடந்த 2004ஆம் ஆண்டு ஃபின்னாயியுஸ் மற்றும் ஹேசல் (Phinnaeus and Hazel) என்ற இரட்டையர்கள் பிறந்தார்கள்.

சத்ருகன் சின்ஹா பாலிவுட் பிரபலம் மற்றும் அரசியல்வாதியான இவருக்கு லூவ் மற்றும் குஷ் எனும் இரட்டை ஆண் மகன்கள் இருக்கிறார்கள்.

இதைப் போல உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க வேண்டும் என்றால் இறைவனை வழிபடுங்கள். இறைவன் திருக்கருணையால் உங்களுக்கு கண்டிப்பாக சூப்பரான இரட்டைக்குழந்தைகள் கிடைக்கும்.!